உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை மீளப் பெற்றுத்தர அரசாங்கம் முயன்று கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் பதவி விலக மறுத்து வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மலர்ந்துள்ள புது வருடத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டம் தொடர்ந்து வருவதடன் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.