ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடையில் இருந்த வெலிமடைக்கு செல்வதற்காக வந்த முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் அதிஸ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் ஹட்டன் காவல்துறையினர், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.
எனினும் முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.