சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்பவரா? எப்போது கிடைக்கும்?

0
34

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் செய்யப்பட்ட ஐம்பதாயிரம் அட்டைகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் புதிய சாரதி உரிமங்கள் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அந்நியச் செலாவணி பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்தாலும், குவிந்து கிடக்கும் சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிட்டு வழங்குவதற்கு கணிசமான காலம் எடுக்கும் என பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here