சாரதி அனுமதி பத்திரத்திற்கு காத்திருப்போருக்கான தகவல்!

0
31

தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் திணைக்களத்திற்கு பல மாதங்களாக கிடைக்காததால் தற்காலிகமாக செல்லுபடியாகும் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு அந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் முறையாக அட்டை அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு திணைக்களத்திற்கு 5 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக ஒரு நாள் சேவையின் ஊடாக 50 அனுமதி பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அடுத்த வாரத்தில் இருந்து இந்த எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் சுமார் 1700 சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதாகவும், வருடாந்தம் சுமார் 08 இலட்சம் அட்டை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here