கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பின் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
தற்போதைய நிலையில் சுமார் 192 குடும்பங்கள் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள தகுதியுடைய குடும்பங்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தங்கள் வீடுகளை மீள நிர்மாணித்துக் கொள்ளும் வரையில் மாதாந்தம் ஐம்பதினாயிரம் ரூபா இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக சீதாவக பிரதேச செயலாளர் பண்டார யாப்பா தெரிவித்துள்ளார்.