சிகரட் பக்கற்றுகளில் 20 சதவீத பகுதியை வெறுமையாக விடும் சட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சிகரட் பக்கற்றுகளின் 80 சதவீதமான பகுதியில் எச்சரிக்கை படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எஞ்சியுள்ள 20 சதவீதமான பகுதியில் குறித்த சிகரட்டின் வர்த்தக நாமத்தை மாத்திரமே அச்சிட அனுமதிக்கப்படும்.
இந்த நடைமுறை அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அமுலில் உள்ளன.
அதன்படி இலங்கையிலும் விரைவில் அது அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.