உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்து செய்யப்படுமாயின் அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும்.
அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.