சித்தார்த் உடன் திருமண நிச்சயதார்த்தம்: இன்ஸ்டாவில் உறுதி செய்த அதிதி ராவ் ஹைத்ரி..!

0
28

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி நேற்று திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென இருவருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் திருமண நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவருமே தங்களுக்கு திருமணம் நடந்ததாக முறைப்படி அறிவிக்காததால் உண்மையில் திருமணம் நடந்ததா அல்லது வதந்தியா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.

இந்த நிலையில் சற்று முன் அதிதி ராவ் ஹைத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பதிவு செய்துள்ளார். மேலும் நிச்சயதார்த்தம் போது மாற்றிக்கொண்ட மோதிரத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே நடிகர் சித்தார்த் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பதும் அதேபோல் அதிதியும் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்று குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C5DZomMy4qq/?utm_source=ig_embed&ig_rid=bf11f4f9-3d26-4963-8b34-d0d6b980d4d8

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here