சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட அத்துருகிரிய படுகொலை: வெளியாகின திடுக்கிடும் தகவல்கள்

0
90

அதுருகிரிய பிரதேசத்தை பீதிக்குள்ளாக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அத்துருகிரிய பிரதேசத்தில், 08 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவரது கொலை மற்றும் நான்கு பேரைக் காயப்படுத்திய சம்பவம் இந்நாட்களில் அதிகளவு பேசப்பட்டு வருகின்றது.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக சோதனை சாவடி அமைக்கபட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here