சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் லிந்துலை பகுதியில் 03.03.2018 அன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டம் 03.03.2018 அன்றைய தினம் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில வாரங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள், அதிகபடியாக படுகொலை கொலை செய்யப்பட்டனர்.
இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகளை கொல்வதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
2009 இல் இதே போன்ற அழிவை ஈழத்தமிழினமும் சந்தித்திருந்தது. அந்தவகையில் மலையக மக்கள் சார்பில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் தெரிவித்தனர்.
அத்தோடு யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)