சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவுதினம்

0
73

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நினைவேந்தலை முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி, நாளை காலை 10 மணிக்கு மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ளுமாறு ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரமுகர்கள், மதத்தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 09.00 மணிக்கு பொரளை மயானத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் கல்லறைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அவரது குடும்பத்தாருடன் இணைந்து ஊடகவியலாளர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.லசந்த விக்ரமதுங்க, இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும் ஆவார்.

இவர் கொழும்பில் இருந்து வெளியாகும் த சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here