சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு!

0
75

சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகிறது.இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைகளில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரும் இந்திய மகளிர் அணியை சேர்ந்தவர்களாவர்.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஐசிசியின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து இவர்களுக்கு வாக்களிக்க முடியும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here