சிறிலங்காவின் அடுத்த அதிபராக ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசவே வருவார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சமணதாஸ அபேகுண வர்த்தன கூறியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் ஒரு நல்ல மற்றும் அறிவார்ந்த தலைவர். அவர் ஜனவரி 12, 1967 இல் பிறந்தார்.அவருக்கு கஜசேகரி என்ற யோகம் மிகவும் சக்தி வாய்ந்தது. எதிர்காலத்தில் அவர் நாட்டின் அதிபராக வருவார்.
இந்த நாட்டின் ஏழைகள், ஆதரவற்றோர், அப்பாவி மக்களுக்கு அளவற்ற சேவைகளை செய்தவர் அவரது தந்தை. அவரது அப்பாவை எனக்கு நன்றாக தெரியும் எனது அப்பாவின் நல்ல நண்பர். சஜித் பிரேமதாச இந்த நாட்டின் அதிபராக விரைவில் பதவி ஏற்கவுள்ள அதிர்ஸ்டசாலி என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2015 ஆம் ஆண்டின் பின்னர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் தமக்கு தொடர்பு இல்லை என்றும் அப்போதே அவரின் தோல்வியையும் அவருக்கு ஏற்பட்ட நிலையையும் தான் கணித்து விட்டதாகவும், மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்தில் பெண் ஒருவரிடம் சோதிடம் பார்க்க சென்று தவறு இழைத்து விட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.