சிறுத்தைகளிடம் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி தொழிலாளர் போர்க்கொடி!

0
125

மெராயா தங்ககலை தோட்ட மேற்பிரிவு மக்கள் தமக்கு சிறுத்தைகளிடம் இருந்து உயிரை பாதுகாத்து தரும்படி கோரிக்கை முன்வைத்து 01.02.2018 அன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்பாட்டம் தங்ககலை மேற்பிரிவு தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கருகில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சுமார் 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு தோட்ட நிர்வாகத்துக்கு எதிராகவே இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது தங்களின் கோரிக்கைகளை பதாதைகள் ஊடாக வெளிக்கொணர்ந்து கோஷங்கள் இட்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தமது பிள்ளைகள் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான வீதியை கடந்து பாடசாலைக்கு செல்கின்றனர். இவ்வீதி தேயிலைக் காடுகளின் ஊடாக வருவதால் அந்த தேயிலைத் காடுகளில் மறைந்திருக்கும் சிறுத்தைகள் எந்த நேரத்திலும் தாக்ககூடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வழமைக்கு மாறாக இந்த தோட்டத்தை தோட்ட நிர்வாகம் உரிய பராமரிப்பினை மேற்கொள்ள தவறி வருவதால் தேயிலைக்கு மேலாக பலவித புற்கள் வளர்ந்து பற்றைகாடுகலாகி வருகின்றது.

இதனால் தோட்ட நிர்வாகம் நாள் ஒன்றுக்கு எதிர்பார்க்கப்படும் 18 கிலோ கொழுந்தை கொய்து கொடுக்க முடியாது எனவும், மாத வருமானத்தில் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு சுட்டிக்காட்டி கோஷமிட்டனர்.

எனவே எமது தோட்டத்தினை நிர்வாகம் செய்யும் பெருந்தோட்ட கம்பனி தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து அதிகாரிகளை எமது தோட்டத்திற்கு அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.

காலம் தாழ்த்தாத நிலையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தொழிற்சங்கங்களின் அழுத்தத்தையும் தோட்ட நிர்வாகிகளுக்கு வழங்க முன்வரவேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேயிலைமலைகளை துப்பரவு செய்து கொடுத்தால் மாத்திரமே சிறுத்தைகளிடமிருந்து எமது உயிரை காப்பாற்றி கொள்ள முடியும். இல்லையேல் எந்த நேரத்தில் எமது உயிர்களை சிறைத்தைகள் காவு கொள்ளும் என்று தெரியாது என தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here