சிறுபான்மையினரின் ஏகோபித்த ஒற்றுமையே பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரனை தோல்விக்கு காரணம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு
நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கைளில்லா பிரேரனை தோல்விக்கு காரணம் இந்த நாட்டின் சிறுபான்மையினரின் ஏகோபித்த ஒற்றுமையே என கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கைளில்லா பிரேரனை தோல்வியை தழுவியதை முன்னிட்டு ஊடகங்களுக்கு தான் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி கூறியுள்ளார்
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்
பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கைளில்லா பிரேரனையில் பிரதமருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கபட்டிருந்நது. இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது வாத பிரதி வாதங்களை முன் வைத்தனர் இருந்தும் இருதியில்; 122 பேர் எதிராக வாக்களித்து நம்பிக்கiயில்லா பிரேரனையை தோல்வி அடையச் செய்யதனர். இந்த வாக்களிப்பு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விக்கு காரணமாக இந்த நாட்டின் சிறுபாண்மை மக்கள் இருந்துள்ளனர்.
குறிப்பாக சிறுபான்மை கட்சிகளான மலையத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி உட்பட முஸ்லிம் கட்சிகளும் இனைந்து வாக்களித்து உள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவிலை இதையும்; நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக கருதுகின்றேன். ஒட்டுமொத்ததில் இலங்கையின் சிறுபான்மை கட்சிகள் யாவும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டள்ளது. இதை உணர்ந்து எதிர்காலத்தில் செயற்பட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வுகான வேண்டும். குறிப்பாக 30 வருட கொடூர யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள இன பிரச்சனைக்கு தீர்வு காணப்படல் வேண்டும்.
இதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். சிறுபான்மை கட்சிகளும் தலைவர்களும் இதை சரியாக பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்
இந்த நாட்டில் எந்த ஒரு அரசாங்கமும் தனது ஆட்சியை அமைக்க வேண்டுமானாலும் அல்லது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானாலும் சிறுபான்மை மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதை மேற்படி விடயம் உணர்த்தி நிற்கின்றது. பிரமருக்கு எதிராக பல நிதி மோசடிகள் முன் வைக்கபட்ட போதும் அவை நிரூபனமாகவில்;லை இருந்தும் முன்னைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்களில் காணக் கூடியதாக இருந்தது. இதன் உடன் ஒப்படுகைளில் பிரமர் ரணில் விக்கரமசிங்க அவர்கள் எவ்வளவோ நேர்மையானவர் என தெரிய வருகின்றது. இந்த நாட்டுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும் ரனில் விக்கரமசிங்க அவர்களின் ஆட்சியே சிறந்தது. இவரின் ஆட்சி காலத்திலேயே சிறுபாண்மை மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. இதை உணர்ந்து சிறுபான்மையாகிய நாங்கள் செயற்பட்டு எமது இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார்.
பா.திருஞானம்