சிறுமி மற்றும் சிறுவன் கடத்தல் வழக்கு; சந்தேகநபர்கள் சார்பில் எட்டு சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜர்!

0
158

அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்திலிருந்து தாயுடன் தலவாக்கலை நகருக்கு வருகை தந்த இரண்டரை மற்றும் ஐந்து வயது(இப்போது மூன்றரை மற்றும் ஆறு வயது) சிறுவன் மற்றும் சிறுமியை கடத்தி விற்பணை செய்யப்பட்டதாக கூறப்பட்டு நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினரால் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஏழு நாட்களின் பின் இரண்டாவது முறையாக நீதி மன்றத்தில் விசாரணைக்காக (11.06.2018)

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பிரமோத ஜெயசேகர முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களாக கைது செய்யவைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்களும் நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் பாதுகாப்பு பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு சிறுமி மற்றும் சிறுவன் ஒருவரையும் காவல் துறையினர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது குறித்த வழக்கில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தலவாக்கலை-லிந்துலை நகரசபை தவிசாளர் அசோக்க சேபால மற்றும் நகரசபை உறுப்பினர் இஷார மஞ்சநாயக்க உட்பட ஆறுவது சிறுமியின் தாயார் உட்பட சிறுமியை தத்தெடுத்த காலி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆகியோருடன் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் நகரசபை தலைவரின் இணைப்பதிகாரியான வர்த்தகர் ஒருவருடன் மேலும் ஒருவரென எட்டுபேர் மன்றில் ஆஜரானார்கள்.

இதன்போது இந்த சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தலவாக்கலை நகரசபை உறுப்பினர் இஷார மஞ்சநாயக்கா வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை
மீட்கப்பட்ட 11வயது சிறுவன் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றும் , ஆறுவயது மற்றும் மூன்றரை வயது சிறுமி மற்றும், சிறுவர் கடத்தப்பட்ட வழக்கு ஒன்றும் ,கடந்த
2017 .06.04 அன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லையென தந்தை ஒருவரால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட வழக்குமாக மூன்று வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

சந்தேக நபர்களின் சார்பாக எட்டு சட்டத்தரணிகளும், கடத்தப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தந்தை சார்பாக சட்டத்தரணி ஒனருவரும் மற்றில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு விசாரணைக்காக சந்தேக நபர்கள் காலை 9.24 மணியலவில் நீதிமன்றத்தில் சிறை காவலர்களால் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் வழக்கு விசாரணை காலை 10.36 மணியலவில் ஆரம்பமானது.

இதன் போது வழக்கை தொடுத்திருந்த நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு பொலிசார் வழக்கின் விபரங்களை நீதவான் பிரமோத ஜெயசேகரவிடம் முன்வைத்தனர்.

இதன் போது சந்தேக நபர்கள் தரப்பில் தமக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென கோரி அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக மனுவை நீதிமன்றில் சமர்பித்தனர் .

இதனை ஆட்சேபித்த சிறுமியின் பக்கம் ஆஜரான சட்டத்தரணி பிணை வழங்க மறுப்பு தெரிவத்ததுடன் மேலும் இவ்வழக்கில் சந்தேக நபர்களுக்கு இவ்வழக்கில் பிணைப்பு வழங்கும் பட்சத்தில் வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஊயிராபத்துக்கள் விளைவிக்க கூடும் எனவும் மேலும் பல சிறுவர் சிறுமிகள் இவர்களால் கடத்த திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிகழ்வதால் பி கையை மறுக்க வேண்டும் என நீதவானிடம் தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதவான் சந்தேக நபர்களை மேலும் ஏழு நாட்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நீதிமன்ற உத்தரவின் பேரில் நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமியை அவரின் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதவான் சிறுமியின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் உடல் பிணை பத்திரத்தில் கையொப்பமிட்டதையடுத்து சிறுமியை தனது தந்தையிடம் வழங்க நீதவான் சம்மதித்து உத்தரவு பிரப்பித்தார்.

தொடர்ந்து வரும் வழக்கில் சிறுமியை நீதிமன்றத்தில் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

,டி.சந்ரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here