சிறுவயதிலேயே நரை முடி பிரச்னையை?? இத Try பண்ணுங்க போதும்..

0
11

இன்று நாம் இயந்திரமாக நகர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில், இளைஞர்கள் பலருக்கும் 20 வயதுகளிலேயே முடி நரைத்து போய் விடுகின்றது.

இது ஒருவகையில் மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கக்கூடும். இருந்த போதிலும் இன்றய காலகட்டத்தில் நாம் எமது வாழ்க்கை முறையினை மட்டுமின்றி உணவுப் பழக்கவழக்கங்களையும் மாற்றி தவறுகள் செய்கின்றோம்.

இதன் விளைவாக உடலில் பல பிரச்சனைகள் எமக்கு தெரியாமலேயே உருவாக்கி விடுகின்றது. இவற்றுள் இளநரையும் அடங்கும். அதனை தவிர்ப்பதற்கு ஒழுங்கான உணவுப்பழக்க வழக்கங்கள், முழுமையான தூக்கம், தண்ணீர் குடித்தல்,அதிகப்படியான யோசனையை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் இளநரை ஏற்படுவதனை தவிர்க்கலாம்.

இளநரையினை போக்குவதற்கு இயற்கை வைத்தியம்

வெள்ளை மமுடியானது ஒருமுறை உங்களுக்கு வந்து விட்டால் அதனை இயற்கையாக கருப்பாக மாற்றுவது இயலாது. அப்போது பாட்டி வைத்தியம் நமக்கு காய் கொடுக்கின்றது.

1.நெல்லிக்காய் பொடி

ஒரு கப் நெல்லிக்காய் பொடியினை முதலில் எடுத்து அதனை சாம்பல் நிறமாக மாறும்வரை சூடாக்கவும். பின்னர் சூடாக்கிய பொடியினில் 500 மேல் அளவு தேங்காய் எண்ணெயினை கலந்து 20 நிமிடங்கள் மிகவும் குறைந்த தீயினில் மீண்டும் சூடாக்கவும்..20 நிமிடங்கள் ஆன பின்னர் குளிர்ந்த பிறகு, அதனை 24 மணிநேரம் ஆற விடவும். அதன் பின் காற்று உள்புகாத வகையில் ஒரு போத்தலில் அடைத்து இந்த எண்ணையை கிழமைக்கு இரண்டு முறை தலைமுடியில் நன்றாக பூசி முடியினை மசாஜ் செய்யுங்கள்.

2. கறிவேப்பிலை

கறிவேப்பிலை ஒரு கொத்தை எடுத்து , அதனுடன் 2 கரண்டி நெல்லிக்காய் பொடி மற்றும் பிரமி பொடி கலந்து நன்றாக அரைக்கவும்.அரைத்த கலவையை முடியின் அடி வேர்களுக்கு படும் வரை நன்றாக மசாஜ் செய்து குறைந்தது 1மணிநேரமாவது விட்டு, அதன் பின்னர் ஷாம்பூ ஒன்றினை பயன்படுத்தி முடியை நன்றாக கழுவவும்.

3. தேங்காய் எண்ணெய்

சுத்தமான இயற்கை தேங்காய் எண்ணையில் எலுமிச்சம் சாற்றினை கலந்து, தலை முடியினில் தினமும் தடவி வரவேண்டும். இந்த இரண்டு கலவையும் இணைந்து ஒரு குறிப்பிட்ட இரசாயன எதிர்ப்பினை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக உங்கள் முடி இயற்கையாகவே கருமை அடையும்.

4. ப்ளாக் டீ

உங்களின் நரை முடியினை கருநிறமாக்க பிளாக் டீ இலைகளினை கொதிநீரில் 2 மணிநேரம் ஊறவைத்து பின் அதனை அரைத்து பேஸ்ட் போல செய்து வைக்கவும்..பின்னர் பேஸ்ட்டினை எலுமிச்சை சாறுடன் கலந்து முடியில் பூசி 40நிமிடம் அவ்வாறே வைத்திருக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here