சிறையிலிருந்து கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சா மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்காணி விவகாரம் தொடர்பில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கணவனுக்கு ஆடை கொண்டு செல்கையில் அதில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கட்டையே பொலிஸார் 11.04.2018 மதியம் மீட்டுள்ளனர்.
கணவனுக்கு கொண்டு வந்த ஆடையை சோதணையிட்ட பொலிஸார் மீட்ட கஞ்சவையடுத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் அட்டன் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த நபரின் வீட்டை சோதணையிட்டுள்ள நிலையில் வீட்டுனுள்ளிருந்து 35.600 மில்லி கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பொலிஸார் அட்டன் மாவட்ட நீதின்றில் ஆஜபடுத்தவுள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்