சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த கைதி

0
35

புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் ஆணொருவர் துணியால் ஜன்னலில் கட்டி தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(5) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்று(5) நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் கப்புஹேன கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சமிந்த திஸாநாயக்க என்பவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். சி ஹதுருசிங்ஹ சடலத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here