சிலாபம் – கொழும்பு தனியார் பஸ்கள் பணிபகிஷ்கரிப்பில்!

0
125

சிலாபத்திலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் தனியார் பஸ் சேவையானது இன்றுஅதிகாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு வரும் பஸ் வணடியின் சாரதி ஒருவர் சிலாபம் – காக்காப்பள்ளி என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் சிலாபத்திலிருந்து கொழும்புக்கான சேவையில் ஈடுபட்டிருக்கும் பஸ்வண்டியின்சாரதி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான நபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய குறித்த சாரதி சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சாரதியை விடுவிக்க கோரியே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சாரதியை விடுவிக்க பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இதன்போது சிலாபம் பஸ் உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பினை வெளியிட்டமையால், தமது கடமைகளுக்கு குறித்த இருவரும் இடைஞ்சலாக செயற்படுவதாக குறிப்பிட்டு குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இருவர் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் பஸ்ஸின் சாரதி ஆகிய இருவரையும் விடுவிக்க கோரியே இந்த பணிப்பகிஸ்கரிப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் தனியார் பஸ் சாரதிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள 3 நபர்களையும் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here