சிவனொளிபாதைக்கு மது போதையில் சென்ற இளைஞர்களை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்மிஹிரிகமயிலிருந்து சிவனொளிபாதைக்கு சென்ற யாத்திரிகள் பயணித்த பஸ்ஸீல் பயணித்த இளைஞர்களே 16.02.2018 மாலை இவ்வாறு கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பஸ்ஸீல் பயணித்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளதுடன் கினிகத்தேன நகரில் பாதையோரம் நடந்து சென்ற இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் முறைபாடு கிடைக்காத நிலையில் மது போதையில் சிவனொளிபாதமலைக்கு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்