மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வந்த முச்சக்கரவண்டியே 22.02.2018 மாலை 5 மணியளவில் லக்கம் சீட்டன் பகுதியில் விபத்துக்குள்ளானது.
சிவனொளிபாத மலையில் வியாராம் செய்யும் குறித்த நபர் தனது வியாபார நிலையத்திற்கு பொருட்கள் கொண்டு வந்த போதே முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது விபத்தில் முச்சக்கர வண்டிசாரதி படுகாயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன், எஸ் . சதீஸ்