சிவனொளிபாதமலைக்கு போதைவஸ்து கொண்டு போவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் விசேட வேலைத்திட்டம்.

0
79

சிவனொளிபாதமலை பருவகாலம் கடந்த 26 ம் திகதி பௌர்ணமி தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது சிவனொளிபாதமலை புனித பூமிக்கு போதை வஸ்துக்கள் கொண்ட செல்வதை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸார் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 10 மாதங்கள் நிரம்பிய ஹோன் என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய நேற்று (30) ம் திகதி குறித்த நாயின் உதவியுடன் நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியகலை பகுதியில் சிவனொளிபாதமலை யாத்தரை மேற்கொள்ளும் வாகனங்கள் விசேட சோதனை நடவடிக்கைகள் உட்படுத்தப்பட்டன.
இதன் போது மதனமோதக்கய என்ற போதை பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதே நேரம் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா சட்டவிரோத சிகரட்டுக்கள் போதை மாத்திரைகள் என போன்ற போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காக சென்ற 07 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஹட்டன் நீதி மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கிரிந்திவெல கொழும்பு குருணாகல் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கை சிவனொளிபாதமலை பருவகாலம் முடியும் வரை இடைக்கிடையே மேற்கொள்ள இருப்பதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்க்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here