சிவனொளிபாதமலைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகளை வருகைத்தந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக வருகைத்தந்துள்ள யாத்திரிகளினால் நல்லத்தண்ணி பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஒரு வாரகாலமாக யாத்திரிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன் யாத்திரிகளின் நலன் கருதி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் சுகாதார சேவைகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
புனித பூமிக்கு வருகைத்தரும் யாத்திரிகள் போதை பொருட்கள்.வாத்தியகருவிகளை கொண்டுவருவதை தவிர்க்குமாறு நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்