சிவனொளிபாதலை வனப்பகுதியிலுள்ள யானைகள் லக்ஷபான ஜம்பேதென்ன குயிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வருகைத்தரும் 15 க்கும் மேற்பட்ட யானைகள் தொடர்பில் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு பிரதேச வாசிகள் அறிவித்ததையடுத்து 14.05.2018 வனஜீவி அதிகரிகள் யானைகள் நடமாட்டம் இடம்பெற்ற பகுதிகளுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்ற போதும் யானைகள் தென்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சப்தகண்ணிய வனப்பகுதியினுடாக வருகைத்தரும் யானைகள் கித்துல் மரம் உட்பட உணவு வகைகளை தேடியே யானைகள் வருகைத்தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததுடன் இரவு நேரங்களிலே வெளியேரும் யானைகளை விரட்டும் வகையில் யானை வெடிகள் பிரதேசவாசிகளிடம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனப்பகுதிகளுக்கு கித்துல் பாணி எடுக்க செல்வோரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்