சிவனொளிபாதமலை விவகாரத்திற்கு நீதி கிடைத்துள்ளது – திலகர் எம்.பி!!

0
138

சிவனொளிபாதமலை விவகாரத்திற்கு நீதி கிடைத்துள்ளது
– பெல்மதுலையில் திலகர் எம்.பி
அம்பகமுவை பிரதேச சபை பிரிக்கப்பட்டபோது சிவனொளிமலையை தமிழர்களுக்கு தாரை வாரத்து கொடுத்துவிட்டதாக அங்Nகு இனவாத கும்பல் கோஷமிட்டது. வழக்கு தொடர்ந்தது. ஆனால் இன்று நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. மஸ்கெலியா சீத்த கங்குலவிகங்குல வட்டாரத்தில சிங்கள மக்களும் வாழவ்து போன்று பெல்மதுலை குட்டாபிட்டிய – நாரங்கொட வட்டாரங்களில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர். எனவே சந்தரப்பவாத இனவாதிகளுக்கு அல்லாமல் பிரதேச சபைகளை பிரித்துக்கொடுப்பதற்கு இணங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைவருக்கும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை பிரதேச சபைக்கு உட்பட்ட போரனுவ, குட்டாப்பிட்டிய – நாரங்கம வட்டாரங்களில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி – தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார கூட்டங்கள் இடம்பெற்றன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் பெல்மதுளை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் இடர் முகாமைத்துவ பிரதியமைச்சர் துனேஸ் கங்கந்தவுடன் இணைந்து கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் இரததினபுரி மாவட்டத்தில் எமது மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளனர்.

இனவாதம் இங்கு மட்டுமல்ல தமிர்கள் அதிகமாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்திலும் உள்ளது. அங்கு அம்பகமுவ பிரதேச சபையை பிரிக்க முயன்ற போது கிளம்பிய இனவாதக் கும்பல் அம்பகமுவையில் இருந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு மாற்றம் பெற்ற சீத்தகங்குல எனும் வட்டாரம் சிவனொளிபாதமலைக்கு அடிவாரத்தில் இருப்பதனால் தமது உரிமைகள் மீறப்படுவதாகவும் தமிழர்களுக்கு தாரை வாரத்துக் கொடுக்கப்பட்டதாகவும் வழக்குத் தொடர்ந்தனர். அன்று நாங்கள் தெளிவாகச் சொன்னோம். சிவனொளிபாத மலை அடிவாரம் மாத்திரமே சீத்தகங்குல வட்டாரத்திற்கு உரியது. மலையுச்சியும் அதற்கு பொறுப்பான விகாரையும் பெல்மதுளை சென்று குட்டாப்பிட்டிய- நாரங்கொட வட்டாரத்தில் அமைந்துள்ளது என. இதனை ஏற்று;கொண்ட நீதிமன்றம் எமக்கு நீதி வழங்கியுள்ளது. இனவாதிகளை அடையாளம் காட்டியுள்ளது.

ஆனால் எமது பிரதேச சபை பிரிப்பு நடவடிக்கையை முடக்க வேண்டும் என எண்ணி வழக்குத் தொடர்ந்த இனவாத ‘தாமரை மொட்டு’ கும்பலுடன் இணைந்து தமிழர்கள் என நெற்றிப்பட்டை இட்டோர் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவது எத்தனை கேவலமானது இங்கு இரத்தினபுரியில் மட்டுமல்ல அங்கு அம்பகமுவை – மஸகெலியாவிலும் தமிழர்களை இணைத்துக்கொண்டு போட்டியிடுகின்றனர். அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

எமது மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக் வேண்டும் என்று பிரச்சாரம் செய்யவே நான் இன்று இரத்தினபுரி வந்துள்ளேன். நாம் இனவாதிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். எங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தவும்; எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபைகளை பிரித்துக்கொடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் யானைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

நாட்டில் எங்கு தமிழர்களுக்கு எதிராக இனவாதம் மேல்களிம்பினாலும் நாம் அதற்காக எதிர்த்துபோராட வேண்டும். வடக்கு கிழக்கு வெளியே வாழும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் அணிதரள வேண்டும். பெல்மதுலை பிரதேச சபைக்கு ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் வட்டார வேட்பாளர்களாகவும் மேலதிக வேட்பாளர்களாக நால்வரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

அவர்களை ஆதரிப்பதன் மூலம் பெல்மதுளை பிரதேச சபையிலும் எமது கூட்டணியின் குரல் ஒலிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பெல்மதுனை பிரதேச மக்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here