சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரைகளின் முக்கிய கவனத்திற்கு

0
128

மத்திய மாகாணத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே, இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக, ஹட்டன் மார்க்கத்தினூடாக அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண்பதற்காக, மாலை வேளையிலேயே சிவனொளிபாத மலைநோக்கிச் செல்வதாகவும் கூறினார்.

தற்போது நீடித்துவரும் சீரற்ற வானிலையால், இரவு வேளையில் சீவனொளிபாத மலைக்குச் செல்வது ஆபத்தானதென்று கூறிய அவர், மலைக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், அது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துவிட்டு, காலை வேளையிலேயே மலை ஏறுமாறும், மாலைக்குள் மலையிலிருந்து கீழிறங்கிவிட வேண்டுமென்றும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில், அம்பகமுவ பிரதேச சபை, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள், நல்லதண்ணி ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.c

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here