சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் கடைகளில் சோதனை – சட்ட மீறல்களுக்காக 6 வழக்குகள்!

0
43

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சட்ட மீறல்களுக்காக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அட்டன் மஸ்கெலியா சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, நுகர்வோர் சட்டங்களை மீறிய 06 கடைகள் சோதனை செய்யப்பட்டு, அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மூத்த புலனாய்வு அதிகாரி அமில ரத்நாயக்க தெரிவித்தார்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு வருகை தரும் மக்களின் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் உள்ள கடைகளை நுவரெலியா நுகர்வோர் விவகார ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும்,

அதன்படி, இந்த ஆய்வு நேற்று (11) மேற்கொள்ளப்பட்டதாகவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்த விசாரணை நுவரெலியா மூத்த புலனாய்வு அதிகாரி அமில ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், புலனாய்வு அதிகாரிகளான எம். முத்துசிவனு டபிள்யூ.உதயங்கர ஆகியோரின் உதவியுடன் நடத்தப்பட்டது. மேலும் இவர்களுடன் எம். எச். ஜி. காமினி, ஐ. என். எம். டி. காண்டவத்தே மற்றும் எஸ்.திரு. எம். ரஸ்லான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here