இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்திய சுற்றுலா பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவர் இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சென்று கொண்டிருந்த போது நேற்று மலை விளிம்பிலுள்ள
பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் உடமலுவ காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஷேட அதிரடிப்படையினர் சுற்றுலாப் பயணியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
எம்.எப்.எம். அலி