சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற பெண் மரணம்

0
63

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பமாகியுள்ளமையினால் அதிகளவான மக்கள் யாத்திரைக்காக சிவனொளிபாத பாத மலைக்கு சென்றுவரும் நிலையில், யாத்ரீகர் குழுவுடன் வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (06) இரவு 07.00 மணியளவில் நல்லதண்ணி நகரின் வாகன தரிப்பிடத்திற்கு கீழே உள்ள சீதா ககுல ஓயாவின் படியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

பனாகொட, பன்னிமுல்ல, பரணவல பகுதியைச் சேர்ந்த பி.எல்.மலானி என்ற 58 வயதுடைய பெண்ணே தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் நடைபெற உள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here