சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் – அக்ஷரா ஹாசன் – விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘கபாலி’ படத்தின் முதல்நாள் சாதனையை ‘விவேகம்’ படம் முறியடித்திருக்கிறது.
சென்னையில் ‘கபாலி’ படம் முதல் நாளில் ரூ.1.12 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், ‘விவேகம்’ படம் ரூ.1.21 கோடியை வசூலித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. விஜய்யின் தெறி ரூ.1.05 கோடியுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கேரளாவில் மட்டும் ‘விவேகம்’ படம் முதல்நாள் வசூலாக ரூ.2.90 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமாக ரூ.16.20 கோடியும்இ இந்தியா முழுக்க ரூ.25.83 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ரூ.1.38 கோடியை ஹவிவேகம்’ படம் வசூலித்திருப்பதாகவும், இது விஜய்யின் ஹபைரவா’ வசூலை விட குறைவே என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.