மலையக இலக்கிய வாதியும் மூத்த ஊடகவியலாளருமான சி.எஸ். காந்தி இன்று காலை காலமானார்.
சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்தநிலைலேயே உயிரிழந்துள்ளார்.
பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த காந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
எனினும், வறுமை காரணமாக இவரால் ஒரு கவிதைப் புத்தகத்தைகூட நூலாக வெளியிடமுடியாமல்போனது கவலைக்குரிய விடயமாகும்.
மலையக இலக்கியவாதியான சி.வி. வேலுபிள்ளையின் மைத்துனர் காந்தி, வீரகேசரி, சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
இவரின் இழப்பு செய்திதுறைக்கு பேரிழப்பாகும், கருடன் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.