சீன வெளிவிகார அமைச்சர் வோங் யீ (Wang Yi) இன்று(08) இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகை தரவுள்ளார்.
இன்று வருகைதரும் இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான இரு தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
இவ் விஜயத்தின் போது இவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் சீன முதலீடுகளை அதிகரித்தல், மற்றும் துறைமுக நகர் திட்டத்தின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை மையப்படுத்தி இக் கலந்துரையாடல் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.