சீமெந்து விலை 150 ரூபாவால் அதிகரிப்பு:

0
45

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவாக உடனடியாக அமலுக்கு வரும் என சிமென்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி 1ஆம் திகதி வற் வரி விதிக்கப்பட்டதால் விலை உயர்த்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய சில்லறை விலை 2450 ரூபாவாகும்.

இதற்கிடையில், தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (NCWU) செயலாளர் சுபுன் அபேசேகர ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறுகையில்,

சீமெந்துக்கு மூன்று சதவீத வற் மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்றாலும், நிறுவனங்கள் மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக விதித்துள்ளன.

இதன்படி, சிமெந்த் தொடர்பான பொருளின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 10 நிர்மாணப் பொருட்களின் விலைகளும் வற் இன் படி அதிகரிக்கப்படும் என்றும் சுபுன் அபேசேகர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here