அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம இலக்கம் 4ம் பிரிவில் ஊரில் குறுக்கே பாய்ந்து சென்ற காட்டாறு (03/06/2021) திடிரென வெள்ளமாக பெருக்கெடுத்து அருகிலிருந்த வீடுகளுக்குள் புகுந்து பாரிய சேதத்தை ஏற்டுத்தியுள்ளது. இதனால் 12 குடும்பங்ளை சேர்ந்த 60 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் 20 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுள்ளது.விவசாய பயிர்களும் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த், க.கிஷாந்தன்