சீரற்ற காலநிலையினால் நானுஓயா கிளாரண்டன் மேற்பிரிவிலுள்ள மூன்று வீடுகள் சேதம்!!

0
117

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயா கிளாரண்டன் மேற்பிரிவிலுள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலையில் வீசிய கடும் காற்றினால் மூன்று வீடுகளில் கூரைகள் காற்றினால் ஈர்க்கப்பட்டு வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27849033_1529252730483801_1586334796_n vlcsnap-2018-02-07-10h16m05s960 - Copy vlcsnap-2018-02-07-10h16m27s505

இதனால் குறித்த வீடுகளில் வசித்த 3 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் குறித்த தோட்டத்திலுள்ள தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(க.கிஷாந்தன், டி.சந்ரூ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here