சீரற்ற காலநிலையினால் நோர்வூட் வெஞ்சர் ஆலயத்தில் மரம் வீழ்ந்து கோயில் சேதம்!

0
179

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தொழிற்சாலை பிரிவில், 28.05.2018  அன்று காலை 7.55 மணியளவில் இப்பிரதேசத்திற்கு வீசிய கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினை தொடர்ந்து 28.05.2018 அன்று அதிகாலை முதல் சில பிரதேசங்களுக்கு கடும் காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் காரணமாகவே இந்த மரம் முறிந்து வீழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரம் அம்மன் ஆலயம் மீது முறிந்து வீழ்ந்ததனால் ஆலயத்தின் கூரைக்கும், சுவர்களுக்கும், விக்கிரகங்களுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

DSC07619 DSC07594 DSC07597 DSC07599

 

குறித்த சம்பவம் இடம் பெறும் போது கோயிலில் எவரும் இருக்கவில்லை என்றும் இதனால் ஏற்படவிருந்த விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

 

எஸ்.சதீஸ்,   க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here