சுகாதார அமைச்சினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

0
71

சுகாதார அமைச்சின் (Ministry of Health) செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவின் (Dr Palitha Mahipala) பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான முறையில் பணம் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரபூர்வமான முறையில் இவ்வாறு பணம் திரட்டப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனவே இவ்வாறான கோரிக்கைகளை நம்பி நன்கொடைகளை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நன்கொடை வழங்குமாறு கோரப்பட்டால் அது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here