நாட்டில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை (01) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களில் சிலர் சிவில் உடை அணிந்து பணியாற்றுவதாக நுவரெலியா மாவட்ட தாதியர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென கோரி குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பெருமளவிலான நோயாளர்கள் சிகிச்சை பெற வந்திருந்த நிலையில் சுகாதார ஊழியர்கள் சிலர் இவ்வாறு கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் வைத்தியசாலையில் வழமையான நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதற்கு இராணுவத்தினர் பணியமர்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை யில் இன்று அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு செ.திவாகரன்