சுகாதார துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்.

0
101

சுகாதார துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களது உணவு ஓய்வு நேரத்தின் போது போராட்டங்கள் நடத்துவதற்கு சுகாதார துறை தொழிற்சங்கங்கள் நேற்று (22) ஏற்பாடு செய்திருந்தன.
இதற்கமைய நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார துறையில் காணப்படும் குறைபாடுகளை முன்வைத்து ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் தாதியர் உள்ளிட்ட பலர் மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் சுகாதார சேவை உயிருக்கு போராடுகிறது அமைச்சர்கள் சுகம் அனுபவிக்கிறார்கள்,உயிரை ஆபத்தில் தள்ளி தரம் குறைந்த மருந்து இறக்குமதியை உடன் நிறுத்து.உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
குறித்த போராட்டத்தில் தாதியர்கள் வைத்தியர்கள்,மற்றும் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here