சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா்.
18 சுகாதார சங்கங்கள் இணைந்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.