கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கண்டியில் ஆரம்பமாகவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைப் போராட்டத்தின் பின்னர் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும்.
சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கட்சியை பிளவடையச் செய்யக் கூடாது என்ற காரணத்தினால் ஜனாதிபதி நீண்ட காலமாக பொறுமை காத்து வந்தார். எனினும் சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.
அந்த அடிப்படையில் பாத யாத்திரையில் பங்கேற்போர் தொடர்பில் கட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.