சுதந்திரதினத்தித்தினை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை.

0
91

75 வது சுதந்திரதினம் நாளை கொழும்பில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியாவினை நோக்கி படையெடுத்துள்ளனர்.
அதிகமான சுற்றுலா பிரயாணிகள் இன்று (03) திகதி ஹட்டன் ஊடாக புகையிரதம் மற்றும் தனியார் வாகனங்களில் வருவதனை காணக்கூடியதாக இருந்தது.

இதனால் ஹட்டன் புகையிரத நிலையத்திலும் அதிக சனநெரிசல் காணப்பட்டதுடன் புகையிரத ஓய்வு விடுதியினையும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் அதினமான சிவனொளிபாதமலை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தமையினால் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டிருந்தன.

பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா நோக்கி செல்வதனையும் காணக்கூடியதாக இருந்தன.

இதன் காரணமாக டெவோன் மற்றும் சென்கிளையார் நீர் வீழ்ச்சி பார்வை கூடங்களில் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டு பிரயாணிகள் நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நடைபாதை வர்த்தகங்களும் சூடு பிடித்துள்ளதாக நடைபாதை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here