இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கின் கீழ் பிரதேச சபை பூந்தோட்ட வளாகத்தில் நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடன் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதோடு
நுவரெலியா பிரதேச சபையின் தலைவரின் தலைமையில் செயலாளர் மற்றும் உபதலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் காரியாலய உத்தியோகஸ்தர்கள் மற்றும் வெளிக்கள ஊழியர்கள் அனைவரின் பங்கேற்புடன் நானுஓயா பிரதேச சபை மைதானத்தில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்