சுதந்திர தின பொது மன்னிப்பில் 90,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை

0
54

2021 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய மியன்மார் இராணுவம், நாட்டின் வடக்கில் நேசக் குழுக்களிடமிருந்து வலுக்கும் எதிர்ப்புக்கு மத்தியில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறது.

மியன்மாரில் சுதந்திர தினத்திற்கு முன்னதாக தலைநகர் நேபிடாவில் (Naypyidaw) அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கின் (Min Aung Hlaing) உரை இடம்பெற்றுள்ளது.

இதன்படி, 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏனைய நாடுகளுடனான உறவுகளை பேணுவதற்காகவும், மனிதாபிமான காரணங்களுக்காகவும் 114 வெளிநாட்டு கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக இராணுவ ஆட்சிக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படுபவர்களில் அரசியல் கைதிகள் உள்ளடங்குகின்றார்களா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, விடுவிக்கப்படும் வெளிநாட்டவர்கள் மியன்மாரில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கைதிகள் விடுவிக்கப்படும் வரை மியன்மாரின் சிறைச்சாலைகளுக்கு முன்பாக மக்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இராணுவ அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியும் உள்ளடங்குகிறார். தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்காக அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here