சுயத்தொழிலை கையிலெடுங்கள்.உங்களுக்கு அதுவே இப்போது கைகொடுக்கும். லெட்சுமனார் சஞ்சய் வேண்டுகோள்.

0
9

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி தலைதூக்கி மக்கள் பொருளாதாரத்தில் பெரும் சவால்மிக்க வாழ்க்கையை னுபவித்து கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு,விலையேற்றம் என்பன தொடர்பில் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

0இந்நிலையில் மக்கள் இந்நிலையிலிருந்து ஓரளவு வாழ்க்கையை கொண்டுசெல்ல சுயத்தொழிலை கையிலெடுத்தால் மாத்திரமே மக்கள் ஓரளவு பஞ்சத்திலிருந்து மீளமுடியுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் சஞ்சய் லெட்சுமனார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் தமக்கு தெரிந்த சுயத்தொழிலை கையிலெடுத்து செய்ய வேண்டும்.அதுமட்டுமல்லாது தரிசு நிலங்களை வெறும் நிலங்களாக போடாமல் விவசாயத்தை கையிலெடுத்து அதனை உரியவகையில் கையாள்வதால் ஓரளவு வாழ்க்கை பிரச்சனையை சமாளிக்க கூடியதாக இருக்கும் எனவே நாடு சுமூகமான சூழ்நிலையை சந்திக்கும் வரையில் சுயத்தொழிலை கையிலெடுக்குமாறு லெட்சுமனார் சஞ்சய் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here