எல்ல பிரதேச நமுனுகுல – பள்ளகெட்டுவ தேர்தல் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற புரட்சித் தமிழர் பேரவை சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் பி.சுரேஷ்குமாரின் தேர்தல் காரியாலயம், நேற்று முன்தினம் (03) இரவு, இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காரியாலயத்தில் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, புரட்சித் தமிழர் பேரவையினரால் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, எல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை மாவட்டத்தில் பசறை, எல்ல, ஹாலி- எல ஆகிய பிரதேச சபைகளின் தேர்தல் தொகுதிகளில் முதன்முறையாக புரட்சித் தமிழர் பேரவை சுயேட்சைக் குழு வேட்பாளர்கள், தேர்தலில் குறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.