North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஆபத்தான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 19 வயது இளைஞர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
U.S. Consulate மீதான தாக்குதலுடன் தொடர்புடைய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
இதில் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவசரப் பணிக்குழு (ETF) அதிகாரி Const. Marc Pinizzotto (43) உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய Nicholas Bennett (19) என்ற சந்தேக நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய Zara Jabbi (19) என்ற மற்றொரு இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதே கட்டடத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு JahVai Roy என்ற 8 வயது சிறுவன் தவறுதலாக பாய்ந்த குண்டடி பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வாரத்தில் ஒன்ராறியோவில் கொல்லப்படும் இரண்டாவது பொலிஸ் அதிகாரி இவர் என்பதால், பிரதமர் Mark Carney மற்றும் மேயர் Olivia Chow ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர்.




