சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம்

0
93

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டமைக்கான கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் இலங்கைக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான அட்டையை காண்பிக்கவேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான டிஜிட்டல் பிரதியை சமர்ப்பிக்கவேண்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் தாங்கள் கொவிட்டினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here