சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இறுதித் தீர்மானம்!

0
25

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு E-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அதற்கமைய ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக விசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here